4062 vacancies.. Date is going to end.. Apply immediately!!

4062 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசின் ஏகலைவா பள்ளியில் காலியாக 4,062 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகள் (EMRS) நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் 8 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வர், முதுகலை ஆசிரியர்கள், அக்கவுண்டண்ட், டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட், உள்ளிட்ட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: பள்ளி முதல்வர் -303 (பணியிடங்கள்), அக்கவுண்டண்ட் -361, ஜூனியர் செக்கரட்டரியேட் அஸ்சிஸ்டண்ட் 759, லேப் அட்டண்ட் 373 என மொத்தம் 4062 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், ஆங்கிலம் (246) இந்தி (200) கணக்கு (244), வேதியியல் (169) உயிரியியல் (236) வரலாறு (185), புவியியல் (154), வணிகவியல் (140), பொருளியல் (161), கம்ப்யூட்டர் சயின்ஸ் (172) என மொத்தம் 2,226 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

 

கல்வி தகுதி: முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். பி.எட் முடித்து இருப்பது அவசியம். துறைசார்ந்த பாடப்பிரிவில் முதுகலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். அக்கவுண்டண்ட் பணியிடத்திற்கு வணிகவியல் பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். ஜூனியர் செக்கரட்டரியேட் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

டைப்பிங் திறன் அவசியம். ஆங்கிலம் என்றால் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தி என்றால் ஒரு நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். லேப் அட்டண்டண்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் லேப் டெக்னிக்(Laboratory techniqu) டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அல்லது அறிவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.

 

சம்பள விவரம்:

* பள்ளி முதல்வர்: ரூ.. 78,800-2,09,200/

* முதுகலை ஆசிரியர் (PGTs) - ரூ. 47600-1,51,100/

* அக்கவுண்டண்ட்- ரூ. 35,400-1,12,400 /

* ஜூனியர் செக்கரட்டரியேட் அஸ்சிஸ்டண்ட் ரூ. 19,900-63,200

* லேப் அட்டண்ட் - ரூ. 18,000-56,900

தேர்வு முறை: கணிணி வழித்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொழித்தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறைந்தபட்சம் மதிப்பெண்கள் கட்டாயம். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 19.10.2023 கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தேர்வு அறிவிப்பாணையை படிக்க https://emrs.tribal.gov.in/site/Information-Bulletin.pdfஎன்ற இணையதளத்தை தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://emrs.tribal.gov.in/show_content.php?lang=1&level=1&ls_id=332&lid=223 லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Employment in PESB – GCIL – Salary Rs.1,80,000/- per month!

PESB – GCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.1,80,000/- ஊதியம்!

PESB – GCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.1,80,000/- ஊதியம்!

PESB – Grid Controller of India Limited ஆனது Director பணிகளுக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

PESB – GCIL காலிப்பணியிடங்கள்:

PESB – GCIL நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Director பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PESB – GCIL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA/ Post Graduate Diploma பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PESB – GCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

PESB – CCL ஊதிய விவரம்:

பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

PESB – GCIL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PESB – GCIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

TNPSC to fill 50000 seats in 2 years – Chief Minister's announcement!

TNPSC மூலம் 2 ஆண்டுகளில் 50000 இடங்கள் நிரப்புதல் – முதல்வர் அறிவிப்பு!

TNPSC மூலம் 2 ஆண்டுகளில் 50000 இடங்கள் நிரப்புதல் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் TNPSC தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்ததால் கலைப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனை உடனே நிரப்பவேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் TNPSC மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 50000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Employment in Company- Salary Rs.35,000/- per month ||

நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000/-சம்பளம் || நேர்காணல் மட்டுமே!

ICMR –NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000/-சம்பளம் || நேர்காணல் மட்டுமே!

ICMR – NIN ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Senior Research Fellow பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி 19.09.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR – NIN தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Senior Research Fellow பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Senior Research Fellow வயது வரம்பு:

பதிவு செய்யும் நபர்களின் வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICMR – NIN கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MSC பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR நிறுவன ஊதிய விவரம் ;

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/- சம்பளம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Project Senior Research Fellow தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ICMR – NIN விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 19.09.2023 அன்று நடைபெறும் Walk in Interview ல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Private Sector Employment Camp in Chennai - Full Details Here!

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - முழுவிவரம் இதோ !

தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை மாதாவரத்தில் உள்ள ஜெய்கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட முன்னனணி நிறுவங்கள் கலந்து கொண்டு 15000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும், இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்களும், பட்டதாரிகளும், ஐ.டி.ஐ தொழிற்கல்வி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் இலவசமாக பங்குபெறலாம். மேலும், இந்த முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன.

 

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - 24615160 என்ற எண்ணிலோ அல்லது pjpsanthome@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Huge salary!

கைநிறைய சம்பளம்! டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு அசத்தலான வாய்ப்பு! அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை!!

மத்திய அரசின் FACT நிறுவனத்தில் டெக்னீசியன் பணியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

கேரளா மாநிலம் உத்யோகமண்டல் பகுதியில் உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் (FACT) நிறுவனம் இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனம் என்பது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது டெக்னீசியன் (ப்ராசஸ்) பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி படிப்பை கெமிஸ்ட்ரி, இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி அல்லது டிப்ளமோவில் கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 5 வயது, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 3 வயது என அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 18 ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆன்லைனில் http://www.fact.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் ‛DGM (HR), HR Department, FEDO Builing, FACT, Udyogamandal, PIN - 683 501' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் மேல் "Application for the post of Technician(Process) on FTB)'' என எழுதி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு 2 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ONGC Job Vacancies – 2500 Appreciates Vacancies!!

ONGC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – 2500 Appreciates காலிப்பணியிடங்கள்!!

காலிப்பணியிடங்கள்:

ONGC நிறுவனத்தில் Apprentices பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 2500 காலியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Northern Sector – 159 பணியிடங்கள்
  • Mumbai Sector – 436 பணியிடங்கள்
  • Western Sector – 732 பணியிடங்கள்
  • Eastern Sector – 593 பணியிடங்கள்
  • Southern Sector – 378 பணியிடங்கள்
  • Central Sector – 202 பணியிடங்கள்

வயது வரம்பு:

18 முதல் 24 வரை

வயது தளர்வுகள்:

  • SC / ST – 05 ஆண்டுகள்
  • OBC – 03 ஆண்டுகள்
  • PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

கல்வி தகுதி:

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Bachelor’s Degree, BBA, B.Sc, Graduate Degree

ஊக்கத்தொகை:

  • Graduate Apprentices – ரூ.9,000/-
  • Diploma Apprentices – ரூ.8,000/-
  • Trade Apprentices – ரூ.7,000/-

தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரபூர்வ தளத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 01.09.2023 முதல் 20.09.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Official Notification –https://ongcindia.com/documents/77751/2660534/apprenticeship2023.pdf/788211c7-a0f3-826c-a62a-166826bed9ca

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

50,000 per month job in ESIC Commission!!

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்!

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்!

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (Employees State Insurance Corporation – ESIC) காலியாக உள்ள Homeopathy Part Time Physician பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்

பணி: Homeopathy Part Time Physician

காலிப்பணியிடம்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை : நேர்காணல் முறையில் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05-09-2023 அதாவது இன்று ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://www.esic.nic.in/) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இன்று (05.09.2023) சென்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Salary up to Rs. 1.40 lakh per month.. Can work in Chennai

மாதம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்.. சென்னையிலேயே பணியாற்றலாம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய கிடங்கு கழகத்தில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவனம் மத்திய கிடங்கு கழகம். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மத்திய கிடங்கு கழகத்தில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? சம்பள விவரம் உள்ளிட்டவற்றை கீழே காணலாம்

பணியிடங்கள் விவரம்: உதவி என்ஜினியர் (சிவில்)- 18 பணியிடங்கள், உதவி என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) -5 பணியிடங்கள், அக்கவுண்டன்ட்- 24 பணியிடங்கள், கண்காணிப்பாளர் (பொது)-11 பணியிடங்கள், ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் -81 என மொத்தம் 139 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி என்ன?: உதவி என்ஜினியர் (சிவில்) பணியிடத்திற்கு சிவில் என்ஜினியரிங்கில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். உதவி என்ஜினியர் (எலக்ட்ரிகல்) பணியிடத்திற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம் அல்லது பிஏ (வணிகம்) அல்லது பட்டய கணக்காளர் உள்ளிட்ட பிரிவில் ஏதேனும் துறையில் கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம். கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு வேளாண்மை அல்லது உயிரியில், வேதியியல், பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: கணிணி வழியில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் 24.09.2023 ஆகும். தேர்வுக்கட்டணமாக பொது பிரிவினர் 1,450 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். நாடு முழுவதும் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்

சம்பளம் எவ்வளவு?: ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு மாதம் ரூ.29,000 முதல் 93,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் பணியமர்த்தப்படலாம். சென்னை, அம்பத்தூர், குரோம்பேட்டை, கோவை, தூத்துக்குடி, திருச்சி மாதவரம், நாகர்கோவில், உடுமைலைப்பேட்டை உள்ளிட்ட பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. தேர்வு குறித்த முழு அறிவிப்புகளை தெரிந்து கொள்ளhttp:// https://cwceportal.com/Careers/Guidelines/11/11_R_4745_1692941703115_b378acb9-9516-46b7-941c-be766ec79440.pdf கிளிக் செய்யவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

6,329 Govt School Vacancies: Today is the last day to apply!!

அரசுப் பள்ளியில் 6,329 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள  ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் 6329 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் (National Education Society for Tribal Students) இந்த ஆள்சேர்க்கையை நடத்துகிறது. 

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பித்தார்கள் கடைசி நிமிடம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..எம்.ஆர்.எஸ் பணியாளர் தெரிவுத் தேர்வு (ஈ.எஸ்.எஸ்.இ) -2023 க்கான அறிவிப்பை நெஸ்ட்ஸ் வெளியிட்டுள்ளது. 

காலியிடங்கள்:

டி.ஜி.டி (பட்டதாரி ஆசிரியர்) மற்றும் விடுதி காப்பாளர் (Hostel Warden) பதவிக்கான 6329 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பதவி காலியிடங்கள்

பட்டதாரி ஆசிரியர் (Trained Graduate Teachers)5660

விடுதி காப்பாளர் (Hostel Warden)669

Total6329

இதற்கான விண்ணப்ப நடைமுறை 19.07.2023-ல் தொடங்கியது. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குரிய கடைசி நாள் 18.08.2023 ஆகும்.

 

கல்வித் தகுதி :

பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, தொடர்புடைய துறைகளில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை கல்வியியல் (Bachelor of Education)  படிப்பு முடித்திருக்க வேண்டும். விடுதி காப்பாளர் பதவிக்கு கட்டாயம் இளங்கலை கல்வியியல் (Bachelor of Education)  படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்து நெஸ்ட்ஸ் இ.எஸ்.இ -2023-ஐ "ஓ.எம்.ஆர் அடிப்படையிலான (பேனா காகிதம்)" முறையில் நடத்தப்படும்.

இணையதள விண்ணப்பங்களின் விரிவான நடைமுறை, தகுதி அளவுகோல்கள் மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பாடத்திட்டத்துடன் பிற விவரங்கள் http://emrs.tribal.gov.in. என்ற வலைதளத்தில் கிடைக்கின்றன. அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஈ.எம்.ஆர்.எஸ்.களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இணையதளம் 19.07.2023 முதல் 18.08.2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

ஈ.எம்.ஆர்.எஸ் என்பது பழங்குடியின மாணவர்களுக்குக் குடியிருப்பு அமைப்பில் தரமான கல்வியை வழங்குவதற்கான பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் முக்கியத் தலையீடாகும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 27 )   NEXT |  LAST